தமிழ் பிளாக் மற்றும் இணையங்களுக்கு ஒரு நற்செய்தி: கூகிள் ஆட்சென்ஸ் இப்போது தமிழில்
பிளாக் மற்றும் இணையதளம் மூலமாக பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் கூகிள் ஆட்சென்ஸ் முதன்மையான நிறுவனம். தரமான விளம்பரங்கள், அதிக பணம் மற்றும் பிரச்னை இல்லாத விளம்பரங்கள் ஏராளமான வசதிகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள் கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தை தான் முதன்மையாக கருதுகின்றனர். இதனை நாட்களாக கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனம் இந்திய மொழிகளில் ஹிந்தி மொழிக்கு மட்டும் தான் அனுமதி விலகி வந்தது. தற்போது தமிழ் மொழிக்கும் கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனம் அனுமதி வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் சில நாட்களுக்கு முன்பு பெங்காலி மொழிக்கும் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் தமிழ் மொழி வேகமாக வளர்த்து வருவதாலும் இலங்கை தமிழர்களின் முயற்சியாலும் தான் கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனம் தமிழ் மொழியை அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு KPMG மற்றும் கூகிள் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரில் ஆங்கிலத்தை விட இந்திய மொழிகளில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக இணையத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது எனபதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் நாட்டில் தான் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் வேகமாக வளைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தமிழ் மொழி அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் தற்போது தமிழ் மொழியில் விளம்பரமும் கொடுக்க முடியும். கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.