இதயமில்லாமல் 555 நாட்கள் உயிருடன் வாழ்ந்தவரைப்பற்றி தெரியுமா?


கொடூர கொலைக்குற்றங்கள் மற்றும் மற்றவர்கள் உழைத்து சம்பாரித்த பொருட்களை திருடுபவர்கள் உண்மையிலேயே இருதயமில்லாதவர்கள். ஆனால், தனக்கு பிறகு தன உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் மிகப்பெரிய இதயம் கொண்டவர்கள். இன்று நாம் பார்க்கப்பபோவது ,இதய தானம் கொடுக்க ஆளில்லாமல் 17 மாதங்கள் செயற்கை இதயத்தை கொண்டு 17 மாதங்கள் அல்லது 555 நாட்கள் உயிர் வாழ்ந்த ஒருவரைப்பற்றித்தான்.

24 வயதுடைய ‘ஸ்டான் லார்கின்’(Stan Larkin) என்ற வாலிபருக்கு தான் 2014 ஆம் ஆண்டு மிச்சிகன் மெடிக்கல் யூனிவெர்சிட்டியில் (University of Michigan Frankel Cardiovascular Centre)செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது . இவர் அமெரிக்க்காவின் மிச்சிகன் நகரைசேர்ந்தார்.  ஸ்டான் லார்கின் மரபணு மற்றும் இதயம் சம்பத்தப்பட்ட பேமலியல் கார்டியோமயோபதி(familial cardiomyopathy) என்ற இதய நோயினால் பாதிக்கப்பற்றிருந்தார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையெனில் இவர் இரண்டு வாரங்களில் இறந்துவிடுவார் என்ற திடுக்கிடும் செய்தியை கூறியுள்ளது. ஆனால், இறுதிவரை இவருக்கு மாற்று இதயம் கிடைக்காததால் , மருத்துவர்கள் சின்கார்டிஓ என அழைக்கப்படும் செயற்கை இதயத்தை பொறுத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ஆரம்பத்தில் பயந்த ஸ்டான் லட்கின் பிறகு வேறு வழியில்லாமல் சம்மதித்தார். சின்கார்டிஓ(Syncardia) என்ற செயற்கை இதயம் காற்றை சுத்தப்படுத்தி , உடல் முழுவதும் ரத்தம் சீராக பயன்படுத்துவதற்கும் மற்றும் சீரான ரத்த அழுத்தத்தை செயற்கையாக உடலுக்கு கொடுக்குப்பதற்கும் உதவுகிறது. செயற்கை இதயத்தை பொருத்திய பிறகு படத்திலிருப்பது போல் 13 கிலோ எடையுடைய கம்ப்ரெஸ்ஸரை தனது பையில் எடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். இந்த கம்ப்ரெஸ்ஸிலிருந்தான் இரு டுயூபுகள் வழியாக சுத்தம் செய்யப்பட்ட காற்று வயிற்றின் வழியாக செயற்கை இதயத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.இந்த கருவி 24 /7  மணி நேரமும்  அவர் உடம்பிலேயே இருக்க வேண்டும் இல்லையெனில் நிமிடத்தில் உயிர் போய்விடும்.

இவர் உடல்கூறுக்கு தகுந்த இதயம் 17 மாதங்கள் கிடைக்காததால் இவர் செயற்கை இதயத்தோடு 555 நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார். இவரது அதிர்ஷ்டம் , திடீரென ஒரு விபத்து உயிரற்றவரின் இதயம் இவர் பொருத்தமாக கிடைக்கவே ,அந்த இதயத்தை இவருக்கு பொருத்தி ,செயற்கை இதயத்தை அகற்றினர்.

இதைப்பற்றி ஸ்டான் லார்கின் கூறுகையில் தற்போது தான் தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும் , தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு தான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனுடன் இருப்பேன் எனவும் , தனக்கு இதயம் தானம் செய்தவரின் குடும்பத்தாரை வெகு விரைவில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். அதோடு , தயவு செய்து மண்ணிற்கு வீணாக செல்லும் உடல் உறுப்புகளை மனிதனுக்கு தானம் செய்யுங்கள் , இதனால் நீங்கள் இறந்தபின்னும் கடவுளாக வாழ்வீர்கள் எனவும் கூறியுள்ளார்.

2016 ல் செயற்கை இதயம் அகற்றப்பட்ட பிறகு , இன்றளவும் அவர் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வருகிறார் என்பது ஒரு இனிய செய்தி.

அமெரிக்காவில் மட்டும் இதயநோயினால் 5 .6  மில்லியன்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , இவர்கள் இதய தானத்திற்காக காத்திருப்பாதாவும் ஒரு தகவல் உள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள் . மேலும் இது போன்ற பதிவுகளுக்கு மௌவல் பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்கள் ! 

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.