ஏங்கிரி பேர்ட் வடிவில் பிளூடூத் மற்றும் அதிநவீன வசதிகளுடன் வெளிவந்துள்ள செக்யூரிட்டி கேமரா

மனிதர்கள் பலர் திருடர்களாக மாறிவிட்ட இந்த காலத்தில் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டிய சில பொருள்களில் செக்யூரிட்டி கேமெராவும் ஒரு அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இப்போதுள்ள கண்காணிப்பு கேமெராக்களை ஏதாவது ஒரு நிலையான இடத்தில் பொருத்தி விட்டால் அதனை இடம் மாற்றுவது மிகவும் கடினம் மற்றும் இதனை மாற்றியமைப்பதற்கு வேலையாட்களை அழைக்க வேண்டும் . ஆனால், இந்த நவீன கேமராவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம் .

பார்ப்பதற்கு ஏங்கிரி பேர்ட் அல்லது ஆந்தை போல் காட்சியளிக்கும் இந்த கேமரா அதிநவீன மோஷன் சென்சார்களுடனும் , ப்ளூடூத் , ஸ்பீக்கர், ஒய்-பை  மற்றும் நெட்ஒர்க் கனெக்ட்டிவிட்டியுடன் வந்துள்ளது .


இதனால் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் அவ்வப்போது உங்கள் ஸ்மார்ட் போனுக்கோ அல்லது கணிணிக்கோ தகவல்கள் அனுப்பிக்கொண்டே இருக்கும் .இதனுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் , எதாவது சத்தமோ அல்லது நகர்வோ தெரிந்தால் விழித்துக்கொள்ளும் மற்ற நேரம் ஸ்லீப் மோடிற்கு சென்று விடும் . இதனால் , உங்களின் மின்சார செலவு மிகக்குறைவாகவே இருக்கும் .


நைட் விஷன் திறன் கொண்டுள்ளதால் இந்த கேமராவினால் இரவிலும் படம் பிடித்து தகவல் அனுப்பமுடியும்.

அதோடு, நீங்கு உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் இந்த கேமராவை இயக்க முடியும். திரும்ப சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியுடன்  வருவதால் நீங்கள் திரும்ப திரும்ப செல்லை மாற்ற தேவை இல்லை .

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு 24 மணிநேரமும் வேலை செய்யும் சக்தி வாய்ந்த ரீசார்ஜபிள் பேட்டரியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவை இயக்க ஒரு அற்புதமான ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் பறவையின் கண் போன்று தோன்றும் LCD ஸ்க்ரீனில் உள்ள நிறத்தை மாற்ற முடியும். 

மேலும் இதனை தட்ப வெப்பநிலைகளுக்கு ஏற்றாற்போல் உருவாகியுள்ளதால் இதனை மழைக்காலங்களில் கூட எந்த பிரச்னையும் இல்லாமல் வேலை செய்யும்.

இந்த கண்காணிப்பு கேமராவின் பெயர் 'யு.எல்.ஓ'. இதனை உருவாக்கியவர்  விவியன் முல்லர் .இதனை 2015 ஆண்டு நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சியில் உருவாக்கப்போவதா முன்னோட்டம் கொடுத்தார் . அப்போது, இவரது ஐடியாவின் மீது நம்பிக்கை கொண்டு பல முதலீட்டாளர்கள்  1.3 மில்லியன்  செலவு செய்து இதனை உருவாக்கியுள்ளனர் .



இந்த கேமராவை நீங்கள் வாங்க விரும்பினால் இங்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் . இதன் தற்போதைய விலை 199 டாலர்கள். இது ஆண்டின் முதலாம் கால்பகுதியான ஜனவரி முதல் மார்ச்சுக்குள்ளாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேமராவின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.