சவுதி அரேபியா பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
சவூதிஅரேபிய வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய பரப்பளவை
கொண்ட நாடு. கடுமையான சட்ட திட்டங்களையும் கொடூரமான தண்டனைகளையும் கொண்டுள்ளதால் உலக
அரங்கில் இந்த நாட்டைப்பற்றிய எதிர்மறையான விமர்ச்சனங்கள் சற்று அதிகமாகவே இருக்கும்
அந்த நாட்டைப்பற்றிய சில முக்கியமான மற்றும் வியப்பூட்டும் தகவலைகளை பார்க்கலாம் வாருங்கள்
மிகப்பெரிய
நிலப்பரப்பை கொண்ட நாடான சவூதி அரேபியா ஈராக் , கத்தார் ,குவைத் ,உக்ரைன், ஓமென் போன்ற
நாடுகளை தனது எல்லைகளாக கொண்டுள்ளது .நூறு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபிய ஹெசாஸ்,
நஹத், லாஸா , அசித் என்கிற நான்கு பகுதிகளாக இருந்தது .௧௯௦௨ ல் எபின்சவுத் என்பவரால்
ரியாத் நகரம் கைப்பற்றப்பட்டு பல போராட்டங்களுக்கு பிறகு அனைத்து பிற பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு
1932 ஆம் ஆண்டு தற்போது சவூதி அரேபியா என்ற நாடு உருவானது .சவூதி அரேபியாவின் தலைநகரமாக
ரியாத் விளங்குகிறது .1932 ல் சவூதி அரேபியா
தனி நாடாக உருவான பிறகு 6 வருடங்கள் கழித்து தான் அங்கே பெட்ரோலியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அரேபியா
நாடுகளின் முக்கிய பொருளாதாரமே தோண்ட தோண்ட கிடைக்கும் எண்ணெய் வளங்கள் தான் .பெரும்பாலான
உலக நாடுகளும் தொழிற்சாலைகளும் இங்கே கிடைக்கும் கச்சா எண்ணெய்களை மூலதனமாக கொண்டு
தான் இயங்குகின்றன .கச்சா எண்ணெய்யை பீப்பாய் கணக்கில் தான் அழைக்கப்படுகிறது .ஒரு
பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது கிட்டத்தட்ட 159 லிட்டர் . இதிலிருந்து தான் பெட்ரோல்
, டீசல் , மண்ணெண்ணெய் என அனைத்து எரிபொருட்களை பிரித்தெடுக்கப்படுகின்றன. ஆனால் ஒரு
பீப்பாயின் மொத்த அளவில் இவைகளின் அளவு வெறும் எட்டில் ஒரு பங்குதான் . மீதி உலைவை
தான் கச்ச எண்ணெய் அல்லது மசுகி எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது . இதனை பயன்படுத்தி
தான் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சாலை போடப்பயன்படும் தார் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
.கச்ச எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற நாடுகளில் ரஸ்யாவிற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியா
இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது .
உலகின்
மிகப்பெரிய மற்றும் அதிக எண்ணெய் கிணறுகளைக்கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் வெனிசுலாவுக்கு
அடுத்தபடியாக சவூதி அரேபியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது .இயற்கை வாயு சேமிப்பில்
ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளது .முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் தன வாழ்நாளில் ஒருமுறையாவது
புனிதப்பயணம் போக வேண்டும் என ஆசைப்படும் புனித தலமான 'மெக்கா' இங்கு தான் அமைந்துள்ளது
.ஆனால் மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இங்கு செல்ல தடை விதித்துள்ளனர். வருடந்தோறும் 'ஹட்ச்'
புனித பயணத்திற்காக பலலட்சம் பேர் ஒன்று கூடும் உலகின் மிகப்பெரிய மசூதி மெக்காவில்
தான் அமைந்துள்ளது.தோராயமாக ஒரு வருடத்திற்கு 1
கோடியே 30 லட்சம் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லீம் மக்கள் வந்து செல்கின்றனர்.
சவூதி
அரேபியாவில் அமைந்திருக்கும் ஆல்ப்ரச் அல் பைட் ட்வெர்ஸ் என்ற ஹோட்டல் தான் உலகின்
மிக உயரமான ஹோட்டல் ஆகும் .இந்த ஹோட்டலில் அமைந்திருக்கும் கடிகாரம் தான் 'டாலஸ்ட்
கிளாக் டவர்' என்ற பெருமையை கொண்டுள்ளது .இதன் சிறப்பு என்னவென்றால் 25 கிலோமீட்டர்
தொலைவில் இருந்துகூட இந்த கடிகாரத்தை நாம் பார்க்க முடியும் என்பது தான் . உலகின் இரண்டாவது
பெரிய கட்டிடம் என்ற பெருமையை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது .
உலகின்
பெண்களுக்கான மிகப்பெரிய பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவில் தான் அமைந்துள்ளது பிரின்சஸ்
டோரா அல் அப்துல் ரகுமான் என்றழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகமானது மணிக்கு 7000 பயணிகளை
ஏற்றிச்செல்லும் அளவுக்கு ரயில் வசதியும் கொண்டுள்ளது .
உலகநாடுகளில்
அதிக சக்தி கொண்ட நாடான அமெரிக்க்காவை ஆட்டிப்படைத்த ஒசாமா பின்லேடன் பிறந்த நாடு சவூதி
அரேபியாதான் .
சவூதி
அரேபியாவின் தேசிய விலங்கு ஒட்டகம் ஆகும் , பொதுவாக ஒட்டகங்களை வளர்ப்பவர்கள் செல்வந்தர்களாகவே
உள்ளனர். சிறு குற்றங்களுக்கு கூட கொடும் தண்டனை வழங்கும் சில நாடுகளில் சவூதி அரேபியாவும்
ஒன்று. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினசேர்க்கை , தீவிரவாதம் , போதைப்பொருள் கடத்துதல்
கடவுளுக்கு எதிராக விமர்ச்சித்தல் இன்னும் பல குற்றங்களுக்கு மரணதண்டனையையும் மற்றும்
ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது .
சவூதி
அரேபியாவில் திரையரங்குகள் இல்லை,தொழுகை நேரங்களில் அரசு உத்தரவின்படி அனைத்து கடைகளும்
மூடிவைக்கப்படுகிறது .
சவூதி
அரேபியாவில் இருக்கும் 'கிங் பெர்ட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்' தான் உலகின் மிகப்பெரிய
விமானதளமாகும் .இங்கே இருக்கும் சவூதி அரம்கோ என்ற நிறுவனம் தான் உலகில் அதிகளவு க்ரூட்
ஆயில் சேமிப்பையும் , உலகில் அதிகளவு ஒரேநாளில் ஆயில் உற்பத்தி செய்யும் திறனையும்
கொண்டுள்ளதாக இருக்கின்றது . ஆயில் சம்பந்தமான நூறு பேட்டண்ட் ரைட்ஸ்களை இந்த நிறுவனம்
வைத்துள்ளது .
கெமிக்கல்
பொருட்கள் உற்பத்தி செய்வது சவூதி அரேபியா தான் முன்னிலையில் இருக்கிறது .குறிப்பாக
'எத்திலீன் கிளைகாள்' உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தையும் , பாலி எத்திலீன் தயாரிப்பில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது .