உலகிலேயே மிக அதிக சம்பளம் கொடுக்கும் கம்பெனிகளின் பட்டியல் 2016
பணம்னா பொணம் கூட வாய திறக்கும்னு சொல்வாங்க ! ஆமா, அந்த அளவுக்கு பணம் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இன்றியமையாததாக இருக்கிறது.படித்து முடித்தவுடன் படித்த துறையில் வேலை கிடைப்பது அரிது ! அதிலும் மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை கிடைத்து அதிக சம்பளத்திற்கு வேலை செய்வது அரிதிலும் அரிது!
சரி , எந்த கம்பெனியெல்லாம் நினைத்துகூட பார்க்க முடியாத சம்பளம் கொடுக்கும் ? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கும்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக கிளாசுடோர்(Glassdoor) என்கிற இணையத்தின் உதவியுடன் நாங்கள் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
இந்த கம்பெனிகள் எல்லாம் அதிக சம்பளம் கொடுக்கும் கம்பெனி என்று எப்படி முடிவு செய்வது? ஒரு கம்பெனியில் வேலை செய்யும் அனைவரின் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படுகிறது.
பிரபல தொழில்நுட்ப கம்பெனிகளான பேஸ்புக் , ட்விட்டர், சேப் முறையே 12,13,16 இடங்களையே பெற்றுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.
10கேடன்ஸ் டிசைன் சிஸ்டம்(Cadence Design Systems)
கேடன்ஸ் டிசைன் சிஸ்டம் 1998 ல் நிறுவப்பட்ட மின்னணு வடிவமைப்பு ஆட்டோமேஷன் மற்றும் இன்ஜினியரிங் சர்விஸ் நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,0,49,162 Rs (10 கோடி) ஆகும்.
9கைட்வைர்(Guidewire)
நமது பட்டியலில் 9 ஆவது இடத்தைப்பெறும் கைட்வைர் ஒரு மென்பெருள் வெளியிடும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,0,49,832 Rs (10 கோடி) ஆகும்.
8பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப்(Boston Consulting Group)
பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப் ஒரு "மேலாண்மை ஆலோசனை"(management consulting ) நிறுவனமாகும்.இந்த நிறுவனம் 85 கிளைகளை கொண்டு 48 நாடுகளில் இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் "100 பெஸ்ட் கம்பெனீஸ் டு ஒர்க் பார்" என்ற அங்கீகாரத்தையும் பெற்ற மிகச்சிறந்த நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,0,49,832 Rs (10 கோடி) ஆகும்.
7அமேசான் லேப்126 (Amazon Lab126)
அமேசானின் துணை கிளையான அமேசான் லேப்126 2004 ல் கலிபோர்னியாவில் துவங்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் பெயர் ஆல்பபெட் 1 ல் இருந்து 26 எழுத்துக்கள் என்பதிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,0,55,191 Rs (10 கோடி) ஆகும்.
6வி.எம் வேர்( VMware)
1998 ல் அமெரிக்காலிலுள்ள பால் அல்டோவில் நிறுவப்பட்ட கிளவுட் மற்றும் விரச்சுவலைசேஷன் தொடர்பான நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,1,91,382 Rs (10 கோடி) ஆகும்.
5கூகிள்
"கூகிள் கூகிள் பண்ணிப்பார்த்தேன் கிடைக்கவில்லை" என்று பாட்டு எழுதுற அளவுக்கு நம்ம எல்லோருக்கும் கூகிள் நிறுவனத்தைப்பற்றி தெரியும். லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆகியோரால் நிறுவப்பட்ட இன்டர்நெட் தொடர்பான நிறுவனம் ஆகும்.தற்போது தமிழன் சுந்தர் பிச்சை அவர்களின் தலைமையில் இயங்கிவருகிறது என்பது நம் அனைவரும் அறிந்ததே!
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,2,99,704 Rs (10 கோடி) ஆகும்.
4மெக்கென்சி & கம்பெனி(McKinsey & Company)
1926 ல் மெக்கென்சி என்பவரால் நிறுவப்பட்ட ஒரு "மேலாண்மை ஆலோசனை"(management consulting ) நிறுவனமாகும். இந்நிறுவனம் தனியார் மற்றும் பொது துறைகளுக்கு முக்கிய தீர்மானங்கள் எடுக்க உதவியாக இருந்துவருகிறது.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,3,83442 Rs (10 கோடி) ஆகும்.
3ஜுனைப்பர் நெட்ஒர்க்ஸ்(Juniper Networks)
1996 ல் பிரதீப் சிங் என்பவரால் கலிபோர்னியாவில் நிறுவப்பட்ட நெட்ஒர்க் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஆகும்.இது ரவுட்டர், ஸ்விட்ச்ஸ், நெட்ஒர்க் மானேஜிமென்ட் சாப்ட்வேர் மற்றும் நெட்ஒர்க் செக்யூரிட்டி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்துவருகிறது.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,5,17422 Rs (10 கோடி) ஆகும்.
2ஸ்ட்ரேடஜி& Strategy& (formerly Booz & Company)
ஏ.டி. கியர்னே வை போன்றே ஸ்ட்ரேடஜி& நிறுவனமும் ஒரு "மேலாண்மை ஆலோசனை"(management consulting ) நிறுவனமாகும். 1914 ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட நிறுவனம் எனெர்ஜி, ஹெல்த்கேர் , பைனான்சியல் சர்வீசஸ், கெமிக்கல்ஸ், டெலிகம்யூனிகேஷன், ஆட்டோமோட்டிவ், ஏரோஸ்பெஸ், மீடியா என அனைத்து துறைகளிலும் கால்பதித்து வெற்றிகண்டுள்ளது.
இந்த நிறுவனம் 57 கிளைகளை கொண்டு உலகம் முழுவது இயங்கிவருகிறது.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10,7,18392 Rs (10 கோடி) ஆகும்.
1ஏ.டி. கியர்னே(A.T. Kearney)
நமது பட்டியலில் முதல் இடத்தை பெரும் கம்பெனி ஏ.டி. கியர்னே ஒரு "மேலாண்மை ஆலோசனை"(management consulting ) நிறுவனமாகும். அதாவது நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு அல்லது நஷ்டத்தில் இயங்கும் போது வளர்ச்சிக்கு உதவும் ஆலோசனை வழங்குவதே இந்த கம்பெனியின் வேலையாகும்.
இந்த நிறுவனம் 61 கிளைகளை 40 நாடுகளில் இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 11,2,23,094 Rs (11 கோடி) ஆகும்.
சராசரி மனிதனால் தன் வாழ்நாள் முழுவதும் கூட சம்பாரிக்க முடியாத 1 கோடி சம்பளம் ஆச்சர்யத்துக்குரியதே !