2018 ஜனவரி மாதம் களத்தில் இறங்கும் 8 தமிழ் படங்களின் பட்டியல்

இந்த பொங்கலுக்கு அல்லது ஜனவரி மாதம் போட்டியின் காலத்தில் இறங்கும் தமிழ் படங்களின் பட்டியல்.

8பாகமதி

'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக நடித்து எல்லோர் மனதையும் கொள்ளை அடித்தவர், அனுஷ்கா. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தப் படம்  திரையிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் அனுஷ்காவின் நடிப்பைப் பார்த்து பலரும் பாராட்டித் தள்ளினர். இந்நிலையில், அனுஷ்காவின் 'பாகமதி' படத்தையும் வெகுவாக எதிர்பார்த்துவருகின்றனர் அனுஷ்காவின் ரசிகர்கள்.

இந்த படம் ஜனவரி மாதம் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

7பாஸ்கர் ஒரு ராஸ்கல்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். 

 

மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் தற்போது தமிழில் உருவாகின்றது.

6மதுரை வீரன்

விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடிக்கும் 'மதுர வீரன் ' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தை PG முத்தையா இயக்கி , விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் படம்.இந்த படத்தில் புது முக நாயகி மீனாட்சி அறிமுகமாகவுள்ளார்.இப்படம் ஜல்லிக்கட்டு பற்றியும் அதில் பங்கேற்கும் காளைகளை பற்றியும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

5குலேபகாவலி

குலேபகாவாலியா? ஏன்மா இதெல்லாம் ஒரு பேராம்மானு யோசிக்கிறீங்களா ? டைரக்ட்டரே  யோசிக்கல நம்ம எதுக்கு யோசிக்கணும். இந்த படத்தோட பெற 1955 களில் வெளியான MGR படத்தின் பெயரையே இந்த படத்துக்கு வச்சுருக்காங்க.

'கதை சொல்ல போறோம்' படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் எஸ் கல்யாண் குமார் இயக்கும் காமெடி திரைப்படம் தான் 'குலேபகவாலி'.

இதில் பிரபுதேவா மற்றும் ஹன்சிகா மாத்வனி நடித்துள்ளனர்.

4இரும்புத்திரை

அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஆகியோர் நடித்துவரும் 'இரும்புத்திரை' படத்தில் விஷால் மற்றும் சமந்தாவின் கதாபாத்திர பெயர்கள் வெளியாகியுள்ளன.

'துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் நடித்துவரும் 'இரும்புத்திரை' படம் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வெளிவர உள்ளது.

'இரும்புத்திரை' படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

3நிமிர்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’ பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிவுள்ளது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.

இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கிறார்கள். நமீதான்னா உடனே நம்ம நமிதான்னு நினச்சீராதீங்க இது வேற நமீதா புதுமுக நடிகை.

தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்கள்.

2ஸ்கெட்ச்

விக்ரம் மற்றும் தமன்னா இணைந்து நடிக்கும் 'ஸ்கெட்ச்' என்கிற திரில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். அதோடு காமெடியில் கொடி கட்டி பறக்கும் சூரியும் இப்படத்தில் நடித்துள்ளார். 

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உச்சத்தை அடைந்தவர் விக்ரம். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த 'இருமுகன்' படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. பொதுவாக ஒருபடத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடும் விக்ரம், இந்த முறை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் வெளியானது.

1தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா சத்யன், கீர்த்தி சுரேஷ் மற்றும் ரம்மியா கிருஷ்னன் இணைந்து  நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன்(ஞானவேல் ராஜா) மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட்  நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது. இப்படத்தில் ஆர் ஜெ பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்த படம் 2013 ல் ஹிந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ என்ற படத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கு மொழியில் 'கேங்க்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த படம் தணிக்கை குழுவிடமிருந்து U / A சான்றிதழ் பெற்றுவிட்டதால் கண்டிப்பாக பொங்கலுக்கு களமிறங்கும் என்பதில் ஐயமில்லை!

இது சூர்யாவின் 35 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.