யூடியூபில் அதிகமுறை பார்க்கப்பட்ட முதல் பத்து வீடியோக்களின் பட்டியல்

சிறுவயதில் நமக்கு பிடித்தமான நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக ஆவலாக காத்திருப்பது  ஒரு சுகம். ஆனால் இன்றையத்தலைமுறை எப்போது வேண்டுமானாலும் தனக்கு பிடித்தமான நிகழ்ச்சியையோ பாடல்களையோ  யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்து மகிழ்கின்றனர். அப்படி எந்த வீடியோக்களை தான் அனைவரும் விரும்பி பார்க்கின்றனர் என்கிற கேள்வி எழுந்தது.   
எந்த வீடியோக்களையெல்லாம் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று ஆராய்ந்து, யூடுயூப் வரலாற்றிலேயே மிக அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான வீடியோக்கள் மியூசிக் வீடியோக்கள் தான். ஏனென்றால் இசை மட்டும் தான் மதம், இனம், நாடு என அனைத்திற்கும் அப்பாற்பட்டு அனைவரும்  விரும்பும் ஒரு விஷயமாகும்.

10வீல் ஆன் தி பஸ்(Wheel On The Bus )


லிட்டில் பேபி பம்(
Little Baby Bum) என்கிற யூடுயூப் சேனல் 9 ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டு "வீல் ஆன் தி பஸ்" என்கிற ஒரு குழந்தைகள் படிப்பிற்கு சம்பந்தமான அனிமேட்டட் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவை இதுவரை யூடுயூப்பில் 153 கோடி மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.  

உங்கள் வீட்டில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உள்ளதா? ஆம் என்றால் முதல்ல இந்த வீடியோவை குழந்தைகிட்ட காமிங்க!
 

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

9மாஷா அண்ட் தி பியர்(Masha and the Bear (Маша плюс каша))


கெட் மூவிஸ் (Get Movies) என்கிற யூடுயூப் சேனல்  ஜனவரி 2012 ஆம் ஆண்டு "மாஷா அண்ட் தி பியர் " என்கிற ஒரு குழந்தைகளுக்கான  அனிமேட்டட் வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவை இதுவரை யூடுயூப்பில் 153 கோடி மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
 

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

8பைலாண்டோ(Bailando ( English Version))

என்குயர் இக்லேசியஸ்  (Enrique Iglesias) என்கிற யூடுயூப் சேனல்  11 ஏப்ரல்  2014 ஆம் ஆண்டு "பைலாண்டோ" என்கிற மியூசிக் வீடியோவை வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவை இதுவரை யூடுயூப்பில் 154 கோடி மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

7லீன் ஆன்(Lean On)


மேஜர்லேசர்   (majorlazer) என்கிற யூடுயூப் சேனல்  22 மார்ச்  2014 ஆம் ஆண்டு "லீன் ஆன்" என்கிற ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவை இதுவரை யூடுயூப்பில் 155 கோடி மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.இந்த வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும் மஹாராஷ்டிராவில் உள்ள கர்ஜட் எனும் இடத்தில் எடுக்கப்பட்டவை ஆகும்.  

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

6ஷேக் இட் ஆப்(Shake It Off)


டெய்லர் ஸ்விப்ட்   (
Tayler Swift) என்கிற யூடுயூப் சேனல்  18 ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டு "ஷேக் இட் ஆப் " என்கிற ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவை இதுவரை யூடுயூப்பில் 158 கோடி மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.நமது பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்த இந்த வீடியோ, 2015 ல் "சாங் ஆப் தி இயர்"(Song of the Year) என்ற விருதையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

5ப்ளேன்க் ஸ்பேஸ்(Blank Space)


இது நமது பட்டியலில் இரண்டாவது முறை இடம்பிடிக்கும் டெய்லர் ஸ்விப்ட்டின் பாடலாகும். 10 நவம்பர் 2014 ஆம் ஆண்டு "ப்ளேன்க் ஸ்பேஸ்" என்கிற மியூசிக் வீடியோவை பதிவேற்றம் செய்யப்பட்டது.பலராலும் பாராட்டப்பட்ட இந்த பாடல் இதுவரை 170 கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

4சாரி(Sorry)


தமிழ் நாட்டில் பலருக்கும் தெரிந்த மேலைநாட்டை சேர்ந்த "ஜஸ்டின் பிபேரின்" பாடலான " சாரி" தான் , 171 கோடி மக்களால் பார்க்கப்பட்டு நமது பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடிக்கிறது.

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

3அப்டவுன் பங்க்(Uptown Funk)


19 நவம்பர் 2014 ஆம் ஆண்டு "மார்க் ரான்சென்" எனும் யூடுயூப் சேனல் "அப்டவுன் பங்க்" என்கிற மியூசிக் வீடியோவை வெளியிட்டது. இது 1980 களில் வெளியான ஒரு பாடலின் மியூசிக்கை போல இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்த போதிலும், இது வரை 178 கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.
  அதோடு பாடல் துறையை சேர்ந்த உயரிய விருதான "கிராமி அவார்ட்" யும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்.

2சி யு அகைன்(See You Again)

விஸ் காலிபா (Wiz Khalifa) எனும் யூடுயூப் சேனல் ஏப்ரில் 2015 ஆம் ஆண்டு " சி யு அகைன் " எனும் பாடலை அப்லோட் செய்தது. பதிவேற்றம் செய்து ஓராண்டிற்குள்ளாகவே  194 கோடி முறை இந்த வீடியோ யூடியூபில் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்

1கங்னம் ஸ்டைல்(Gangnam Style)

இருநூறு கோடிக்கு அதிகமான முறை பார்க்கப்பட்ட ஒரே யூடுயூப் வீடியோ நம்ம "கங்னம் ஸ்டைல் " வீடியோதான். இதுவரை இந்த வீடியோவை 262 கோடிக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.   அப்படி என்ன தான் இந்த வீடியோவில் ரசிக்கும் படியாக இருக்கிறது? எங்களுக்கும் தெரியவில்லை.  

கங்னம் என்றால் என்ன என சிலருக்கு கேள்வி இருக்கும்? கங்னம் என்பது சவுத் கொரியாவில் உள்ள ஒரு சிறிய பகுதியாகும்.


இந்த வீடியோவை காண க்ளிக் செய்யுங்கள்.


உங்களுக்கு இந்த பட்டியல் பிடித்திருந்தால் தவறாமல் நண்பர்களிடம் பகிருங்கள்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.