தில்லு இருந்தா இந்த பத்து திகில் திரைப்படத்தை தனியா பாருங்க

சொல்லப்போனால் எல்லாருக்கும் இருட்டு , பேயினா பயம் இருக்கும் ஆனா சிலர் எனக்கு எந்த பேய் படம் பார்த்தாலும் பயமே இல்லனு சொல்லிட்டு திரியுறாங்க. தியேட்டர்ல 50 க்கும் மேற்பட்டவங்க கூட சேர்ந்து பார்குறதுனால நமக்கு சில சமயம் பயமிருக்காது. இதுவே வீட்ல எல்லா லைட்டையும் ஆப் பண்ணிட்டு நல்ல சத்தமா சௌண்ட் வச்சிட்டு தனியா இந்த பட்டியலில் இருக்க படங்களை பார்த்தா அவுங்களுக்கு பயம்னா என்னனு தெரியும்.  

நாங்கள் 200 க்கும் மேற்பட்ட திகிலூட்டும் படங்களை ஆராய்ந்து இந்த பட்டியலை டாப் டென் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

10டெக்சாஸ் செயின்ஷா மசாக்கர் (Texas chainsaw massacre)

1974 ளில் வெளியாகிய இந்த படம் பல எதிர்ப்புகளுக்கு பின் திரையிடப்பட்டது.இந்த படம் இதயம் பலவீனமானவர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டது.இரண்டு சகோதரர்கள் டெக்ஸ்சாசிலுள்ள தனது தாத்தாவின் சமாதியை பார்க்க செல்லும் போது மனிதனை உண்ணும் மனிதர்களிடம் சிக்கி கொடூர மரணம் அடைகின்றனர் என்பதே கதைக்களம்.உலகிலேயே இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இது இரண்டாவது மிகவும் திகிலான படம்   என "எண்டெர்டைன்மெண்ட் வீக்கிலி" (Entertainment weekly) எனும் நாளிதழ் பெருமைப்படுத்தியுள்ளது.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

9அலோன் (Alone)- 2007

ஒட்டிப்பிறந்த இரண்டு சகோதரிகள் தாங்கள் இருவரும் சாகும் வரை ஒன்றாக அன்பாகவும் இருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.இருவரும் ஒரே பையனை காதல் செய்ததன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து உடலை தனியாக பிரிக்க ஆபரேஷன் செய்கின்றனர். இதன் விளைவாக ஒரு பெண் உயிரிழந்துவிடுகிறார்.தன்னால் தான் தன் சகோதரி இறந்துவிட்டதாக வருத்தப்பட்டு வந்த இன்னொரு பெண்ணை பேயாக மாறி பழிவாங்குவதே இதன் கதைக்களம்.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

8ஷட்டர் (SHUTTER)- 2004

ஒரு நாள் போட்டோக்ராபர் மற்றும் அவரது காதலி காரில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணின் மீது இடித்துவிட்டு உதவி செய்யாமல் பயந்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.சிறிது நாட்கள் கழிந்து அவர் இருக்கும் புகைப்படத்தில் ஏதோ ஒன்று மர்மமாக இருப்பதை பார்க்கிறார் ஆனால் அது சரியாக எடுக்காத புகைப்படம் என நினைக்கிறார் பிறகு தான் அது ஆவி என தெரியவருகிறது.இவர்கள் இனி என்ன செய்வார்கள் என்பதே கதைக்களம்.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

7ரெக் (REC)- 2007

2007 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வசூலை வாரிய திகில் திரைப்படம் இது. தொலைக்காட்சி தொடர்பாளரும் , ஒளிப்பதிவாளரும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏதோ ஆபத்து என அறிந்து அங்கு சென்று பார்க்கின்றனர்.அப்போது அவர்கள் தீய சக்திகளால் பெரும் ஆபத்தை சந்திக்கின்றனர்.படம் உண்மையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் ஸ்க்ரிப்ட் கொடுக்கப்படவில்லை .அவர்கள் சில காட்சிகள் நடிக்கும் போதுதான் அவர்களுக்கு கதை தெரிய வந்துள்ளது .   உங்களுக்கு தீய கனவுகள் வர ஆசையா ? இந்த படம் உங்களுக்கு பொருத்தமானது.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

6ஷா (SAW)- 2004

வாழ்வின் அர்த்தம் புரியாமல் தவறு செய்யும் பல நபர்களுக்கு தண்டனை கொடுக்க நினைக்கும் ஒரு மர்ம நபர்.அவர் தண்டனை  கொடுக்க விரும்பும் சில நபர்களோடு அவர்களுக்கு நெருக்கமான சிலரையும் வைத்து கொடூர முறையில் ஒரு விளையாட்டை விளையாடுகிறார். இந்த விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது.   மனம் கல்லாக்கிக்கொண்டு தான் இந்த படத்தை பார்க்க இயலும்.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

5டெட் சைலன்ஸ் (DEAD SILENCE)- 2007

மந்திரவாந்தியுடன் புதைக்கப்பட்ட பொம்மை பேயாக மாறுகிறது.தம்பதிகளுக்கு பரிசாக வந்த இந்த பொம்மை யாரெல்லாம் பயப்பட்டு அலறுகிறார்களோ அவர்களை வினோத முறையில் போட்டுத்தள்ளுகிறது. ஷா படத்திற்கு இசையமைத்தவர் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.   இந்த படத்தை பார்த்த பல பேர் தனது படுக்கையறையில் இந்த பொம்மையை கண்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு பயத்தில் 7 நாள் தூங்காமலும் இருந்துள்ளனர்.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

4த ரிங்க் (THE RING)- 2002

சபிக்கப்பட்ட வீடியோ டேப்பை யார் பார்த்தாலும் 7 நாட்களுக்குள் ஒரு போன் கால் வரும் சேர்ந்து சாவும் வரும் இதுவே இந்த படத்தின் கதைக்களம்.தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெண் பேய் வெளியே வரும் காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

3இன்சைடியஸ்(INSIDIOUS) - 2010

இந்த படம் பெஸ்ட் ஹாரர் பிலிம்கான பிரைட் மீட்டர் அவார்டை பெற்றுள்ளது.இதில் இடம் பெரும் திகில் காட்சிகள் உங்களை சேரின் நுனியில் அமரவைக்கும்.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

2தி கான்ஜுரிங் (THE CONJURING)- 2010

பேய் படம் என்றாலே பீறிட்டு வரும் ரத்த காட்சிகள் என ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் முற்றிலும் வேறுபட்ட படம். பேய் நடமாட்டமுள்ள வீட்டில் வசிக்கும் சிலருக்கு உதவி செய்யும் கணவன் மனைவியின் கதை. இது முழுக்க முழுக்க உண்மையாகவே நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.இந்த திரைப்படத்தில் 10 க்கும் மேற்பட்ட காட்சிகள் பயத்தின் உச்சக்கட்டத்திற்கு  நம்மை கொண்டுசெல்கிறது.   இந்த படம் பிலிப்பைன்ஸில் திரையிடப்பட்ட போது திரையரங்கின் உரிமையாளர்கள் பாதரியார்களை வைத்து ஆசீர்வாதம் செய்துவந்தனர். ஏனென்றால் இந்த படத்தை பார்த்த பலரின் வாழ்க்கையில் தீமைகள் மற்றும் கெட்ட கனவுகள் வருவதாக தெரிவித்துள்ளனர்.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

1சினிஸ்டர் (SINISTER)- 2012

குற்றங்களை கதையாக எழுதும் ஒருவர் தனது கதை உண்மையாக இருந்தால்  நல்ல வரவேற்பிருக்கும் என கருதி கொடூர கொலைகள் நடந்த வீட்டிற்கு குடும்பத்துடன் இடம்பெயர்கிறார். அங்கு நடக்கும் வினோத நிகழ்வுகள் உங்கள் ரத்தத்தை உறைய வைக்கும்.   இந்த படம் ஏன் முதலிடத்தை பெற்றுள்ளது? பாருங்கள் உங்களுக்கே புரியும்.
டவுன்லோடு செய்ய கிளிக் செய்யுங்கள்

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.