தி.மு.க வின் சிறந்த பத்து தேர்தல் அறிக்கைகள் ,2016

2016 இன் மே 16 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு திராவிட கட்சிகள் உட்பட பல கட்சிங்கள் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.குறிப்பாக தி.மு.க வெளியிட்டுள்ள மக்களுக்கு பயன்படக்கூடிய மற்றும் சிறந்த பத்து தேர்தல் அறிக்கைகளை தொகுத்து வழங்குவதற்கு மௌவல் கடமைப்பட்டுள்ளது.

10வேலை வாய்ப்பு 

குடும்பத்தில் முதல் தலைமுறையினருக்கு அரசு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும்.

9ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படும் 

தமிழர்களின் வீர விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும்.இதனால் மதுரை உள்ளிட்ட ஜல்லிக்கட்டு பெருவாரியாக நடைபெறும் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

8பால் விலை குறைக்கப்படும் 

ஆ.தி.மு..க ஆட்சியில் பாலின் விலை மிகவும் உயர்ந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளானதாகவும் அதை தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பாலின் விலையை குறைந்தது லிட்டர் 7 ரூபாய்க்கு வழங்குவதாவும் தெரிவுத்துள்ளனர்.

7ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன் 

எட்டாவது ஊதியக்குழு அமைத்து அரசு அலுவலர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.   ஆ.தி.மு.க அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.   பணிக்காலத்தில் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்ப நல நிதியானது 1 லட்சம் 50 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

6மகளிர் நலன் 

அரசுபனிக்கு செல்லும் பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் 6 மாத பேறுகால விடுமுறையை 9 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படும்.கருவில் இருக்கும் போதே தாய்க்கும், சேய்க்கும் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தாய் அல்லது சேய்க்கு சிகிச்சை தேவைப்படும் போது அதற்கு ஏற்படும் செலவை அரசே ஏற்கும்.

5பொதுவிநியோக திட்டம் 

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்ட் வடிவில் வழங்கப்படும்.நியாய விலைக்கடைகளில் சரியாக எடை போடுவதில்லை என பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைப்பதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அரசே பாகெட்டுகளில் வழங்கப்படும் என அறிக்கை விடுத்துள்ளனர்.

4தடையில்லா மின்சாரம் 

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியை பெருக்கி வீடுகள் , தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.மின்சார வாரியத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையிருப்பதால் , பொதுமக்கள் மிகக்கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய இன்னலுக்கு ஆளாகிறார்கள்.எனவே, பொதுமக்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் மாதம் ஒரு முறை கணக்கெடுத்து மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

3கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 3G / 4G  வசதியுடன் மடிக்கணினி அல்லது கைகணினி இலவசம் 

மாணவர்களின் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தமிழகத்தின் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் சுமார் 16 லட்சம் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 3G / 4G  வசதியுள்ள மாதம்  10 GB வரை பதிவிறக்கம் செய்யும்  திட்டத்துடன்  மடிக்கணினி அல்லது கைகணினி அரசு செலவில் இலவசமாக வழங்கப்படும் 

2மீனவர் நலன் 

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும்,சிறைபிடிக்கப்படுவதும்,கொல்லப்படுவதையும் குறித்து  தி.மு.கழகம் கடுமையான முறையில் தனது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் , மத்திய அரசை இரு நாட்டுக் கடற்கரைப் பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை (கிரைசிஸ் மேநேச்மென்ட் சென்டர்)  உருவாக்க வற்புறுத்தும் எனவும் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.   

1மதுவிலக்கு 

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் . மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஏற்கனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் புதிய நிறுவனத்தில் தங்கள் பதவி மூப்பினை இழக்காமல் , பணியாற்ற வழிவகை செய்யப்படும். அதோடு மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க டி அடிக்சன் சென்டர்ஸ் உருவாக்கப்படும்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.