கடல் கன்னி - இருக்கு ஆனா இல்ல
எப்பவுமே நமக்கு தெரியாத விசயத்த பத்தி தெரிஞ்சுக்கறதுல நமக்கு அளவு கடந்த ஆர்வம் இருக்கும்.தெரியாத விசயம்னு நாங்க சொல்றது பேய் இருக்கா இல்லையா , பறக்கும் தட்டு இருக்க இல்லையா, ஏலியன் இருக்க இல்லையான்னு நமக்கு தெரியாத அல்லது நம்மால் நிரூபிக்க முடியாத பல விசயங்களைப்பற்றி தான் .அதுபோல கடல் கன்னியும் ஒரு நிரூபிக்க முடியாத விஷயம். கடல் கன்னியைப் பற்றிய கதை மற்றும் ஓவியங்கள் உலகம் முழுதும் இருந்தாலும் முதன் முதலில் பண்டைய ஆஸ்ரியாவில் தான் தோன்றியது. ஆம், கடவுளின் மறுவுருவமாக கருதப்பட்ட அடர்கரிஸ் எனும் பெண் தனது காதலனை தெரியாமல் கொலை செய்துவிட்டதாகவும் அதற்கு தமக்கு தானே தண்டனை கொடுக்கும் விதமாக குளத்தில் குதித்ததாகவும் , பிறகு உடலின் கீழ் பகுதி மட்டும் மீன் போன்ற அமைப்பாக மாறியதாகவும் குறிப்புகள் உள்ளன. என்னதான் உலக நாடுகளின் பல பகுதிகளில் பலர் கடல் கன்னியை நேரில் பார்த்ததாக தெரிவித்தாலும் இன்னும் சரியான ஆதாரம் கிடைவில்லை எனவே கூறலாம். எனினும் கடல் கன்னியை நேரில் பார்த்தவர்களையும் அவர்கள் வைத்துள்ள சான்றுகளையும் தொகுத்து வழங்குகிறது மௌவல் டாப் டென் . இதைப் பார்த்த பின்பு நீங்களே முடிவு செய்யுங்கள் கடல் கன்னி இருக்கா இல்லையா என்று.
10கிறிஸ்டோபர் கொலம்பஸ்-ஜனவரி 1493.
உலகப் புகழ்பெற்ற இத்தாலி நாட்டை சேர்ந்த மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது கடல் பயணத்தின் போது கடல் கன்னியை பார்த்ததாகவும், நமது பண்டைய ஓவியங்களில் இருப்பதை போல அழகாக இல்லை எனிலும் கிட்டத்தட்ட மனித தோற்றத்தை கடல் கன்னிகள் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
9ஹென்றி ஹட்சன் - ஜூன் 1608
ஹட்சன் நதிக்கரையில் உயிரினங்களை ஆராய்ச்சி செய்து வந்த ஹென்றி ஹட்சன் தனது குறிப்பேடுகளில் தாமஸ் ஹில்ஸ் மற்றும் ராபர்ட் என்பவர்கள் கடல் கன்னியை பார்த்ததாகவும் , அதன் உடலின் மேல் பகுதி பார்பதற்க்கு மனிதனைப்போலவும் கீழ் பகுதி மீனை போலவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
8ஸ்பெயின் ஜூன் 1737
பெரும்பாலும் கடல் கன்னியை நேரில் பார்த்ததாக சொல்பவர்களே அதிகம்.ஆனால், ஸ்பெயினில் கடல் கண்ணை கண்டதாக தெரிவித்துள்ளனர்.இது டெய்லி கேன்னபெக் எனும் அகஸ்டா நாளிதழில் வெளியான செய்தியாகும்.பார்த்தவர், யார் என்று நமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை எனினும் அவர் கடல் கண்ணனைப் பார்த்ததாகவும், அதன் தலைப்பகுதி ஆட்டினைப்போலவும், மீசை மற்றும் தாடி இருந்ததாகவும், அதன் நிறம் மிகவும் கருப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
7காப் பிரெட்டன் கனடா - ஆகஸ்ட் 1886
பெக்னால் எனும் அறிவியளாலற்கு காப் பிரெட்டன் எனும் இடத்தில் மீன் பிடிக்கும் ஒரு மீனவருக்கு கடல் கன்னியின் சடலம் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே பெக்னால் ஆர்வமாக தன்னுடன் சில மீனவர்களை கூட்டிக்கொண்டு கடலுக்கு போனபோது அவர்கள் கடல் கன்னியை தனது படகில் இருந்து சில அடி தூரத்திலேயே கண்டனர்.அது அசையாமல் இருந்ததால் அது இறந்துவிட்டதாக கருதி அருகே சென்ற போது அசைய துவங்கிய அது மனிதன் அமருவதைப்போல நீரில் அமர்ந்து அவர்களை பார்த்துவிட்டு சில நொடிகளில் காணமல் போய்விட்டதாக கூறுகின்றனர். உடன் சென்ற மீனவர்கள் ஆச்சர்யத்தில் முழி பிதிங்கினர்.
6கேய் ஐலேண்ட்ஸ் - இந்தோனேசியா -1943
இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் ஜாபனீஸ் ராணுவ வீரர்கள் கேய் ஐலேண்ட்ஸ் கடற் கரைகளில் நிறைய முறை கடல் கன்னியை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அது தோராயமாக 150 செண்டி மீட்டர் நீளம் இருந்ததாகவும் , பிங்க் நிறத்திலும் , மனிதனை போல உடற்கட்டினை கொண்டிறிந்ததாகவும் கூறியுள்ளனர். ஆராய்சியாளர் தரோ ஹாரிபாவுக்கு கேய் ஐலேண்ட்ஸ் கடற்கரையில் கடல் கன்னியின் சடலம் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. கடல் கன்னியைப்பற்றி ஆராய்ச்சி செய்து வந்த அவருக்கு ஒரு இனிய செய்திதான் அது.அந்த சடலத்தை தனது கண்களிலேயே கண்ட அவர் , தனது சொந்த நாடான ஜப்பானுக்கு சென்று தனது தோழமை அறிவியலாளர்களை சென்று பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்தினார்.ஆனால், அங்கு யாரும் அவரை நம்பாபததால் ஆராய்ச்சி நடக்கவில்லை. கேய் ஐலெண்ட்சை சேர்ந்த மக்கள் கடல் கன்னியை "ஓரங் இகன்" என அழைகின்றனர்.இதன் பொருள் மீன் மனிதன் என்று அர்த்தம் மலாய் மொழியில்.அந்த மக்கள் அரிதாக சில சமயங்களில் அவர்களது வலையில் கூட கடல் கன்னி மாட்டியுள்ளது எனவும் கூறுகின்றனர்.
5பிரிட்டிஷ் கொலம்பியா , கெனடா - 1967
சுற்றுலா பயணிகள் இருவர் படகில் சென்று கொண்டிருக்கும் போது பெரிய மீன் போன்ற தோற்றமுடைய பெண் நீந்தி செல்வதைக்கண்டுள்ளனர்.அது பார்பதற்க்கு அழகாகவும் , நீள முடியை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது டைம்ஸ்-க்லோநிஸ்ட் நாளிதழில் வெளியாகி , பெரும் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
4சவுத் ஆப்ரிகா- ஆகஸ்ட் 1991
சவுத் ஆப்ரிக்காவில் ஆகஸ்ட் மாதம் 1991 ஆம் ஆண்டு இறந்த சுறா ஒன்று கடலின் கரை ஒதுங்கியது.அதை, ஆராய்ச்சி செய்த போது அதன் வயிற்றில் மனிதனைப்போல தோற்றமுடைய ஏதோ ஒன்று இருந்ததாகவும், சுராவின் வாய்ப்பகுதியில் கூரான எலும்பு போன்ற ஒரு அமைப்பு சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.இது , கடல் கன்னியாக இருக்கலாம் எனவும், அந்த கூரான முல்லைப்போன்ற அமைப்பு கடல் கன்னியின் ஆயுதமாக இருக்கலாம் எனவும் அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
3ஜிம்பாபேவ் - ஆப்ரிக்கா -2012
கடல் கன்னி , ஜிம்பாபேவில் கட்டப்பட இருந்த அணையை கட்ட விடாமல் ஊழியர்களை இடையூறு செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா ? ஆம், இதை அந்த நாட்டின் மந்திரி கொமோவே இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இது ஹெர்லார்ட் பத்திரிக்கையில் வெளியான செய்தியாகும். அந்த செய்தியை படிக்க க்ளிக் செய்யுங்கள் http://www.dailymail.co.uk/news/article-2097218/Reason-Zimbabwe-reservoir-delays--mermaids-hounding-workers-away.html
2க்ரீன்லெண்ட் சி - மார்ச் 2013
மிகச்சிறந்த கடல் ஆராய்ச்சியாளரான டாக்டர் டார்சன் ஸ்கிமிட் மற்றும் டேனிஷ் குழுவுடன் கடல் தரை மட்டத்தை ஆராய்ச்சி செய்வதற்காக 1000 அடி கீழே சென்ற போது வித்யாசமான சத்தங்களை கேட்டதோடு , வித்யாசமான உருவத்தையும் கண்டுள்ளனர். பொதுவாக சுறாக்கள் சத்தம் போடும் , ஆனால் இது வித்யாசமானதாக இருந்துள்ளது.ஆனால், இதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய ஐஸ்லாந்து ஜியோசர்வே இதற்கு அனுமதிக்கவில்லை.ஆகவே,தனது சொந்த செலவில் ஸ்கிமிட் மற்றும் அவரது நண்பர் கையில் இரு கேமராவுடன் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றனர் அப்போது திடீரென கடல் கன்னி அவர்களது கண்ணில் பட்டது. அவர்கள் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கொடுத்த பேட்டி மற்றும் அவர்கள் பதிவு செய்த வீடியோவை காண https://www.youtube.com/watch?v=DU6_gXPAUNM&feature=youtu.be
1மே 2013 - கிரியாட் யாம் , இஸ்ரேல்
மே 2013 - கிரியாட் யாம் , இஸ்ரேல் கிரியாட் யாம் வெகு காலமாகவே கடல் கன்னி தென்படுவதாக அந்நகரத்து வாசிகள் கூறியதை அடுத்து , அந்நாட்டின் அரசு கடல் கன்னி இருப்பதை உறுதி படுத்தும் சான்று கொண்டு வருபவர்களுக்கு 1 மில்லன் டாலர் வெகுமதி அளிப்பதாக கூறியிருந்தது.ஆனால் இதுவரை யாரும் அந்த பரிசுத்தொகையினை பெறவில்லை. இந்நிலையில், சல்மா கொஹென் எனும் ஒருவர் தான் தனது நண்பர்களுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு பெண் சந்தேகப்படும் விதமாக கடற்கரையில் இருப்பதாக பார்த்துள்ளார் அதோடு அதனை பதிவும் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக