கொடூரமான நோய்களுடன் உயிர் வாழும் குழந்தைகள்

இந்த குழந்தைகளை பார்க்கும் போது "மனிதனாய் பிறப்பது அரிது, அதிலும் எந்த வித உடல் நல குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பது அரிது" என்ற ஒளவையாரின் வரிகள் தான் நியாபகம் வருகிறது. என்ன தான் மருத்துவ துறை அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்னும் பல அரிய நோய்களை வரும் முன்னே காப்பதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சத்திலாத உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்களே இம்மாதிரியான நோய்தொற்றுக்கு காரணம்.

தானாகவே  தோல் உரிந்து கீழே விழும் நோயுடன் வாழும் குழந்தை முதல் மூக்கில்லாமல் பிறந்த குழந்தை வரை இடம்பெற்றுள்ள பட்டியலை மனதை கல்லாக்கிக்கொண்டு வாருங்கள் பார்க்கலாம். 

10நீண்ட கழுத்துடன் துன்பப்படும் சிறுவன்

சீனாவில் சாங்காய் நகரத்தில் வாழும் சிறுவன் வேங்குய்க்கு "கன்ஜெனிடல் ச்கோலயசிஸ்" எனும் நோயின் காரணமாக அவன் கழுத்து நீண்டு கொண்டே வருகிறது.அவர் நடக்கும் போது தாங்க முடியாத கழுத்து வலி வருவதாகவும், அதனை என்னால் பார்க்கமுடியவில்லை எனவும் அவனது தந்தை பு ஜென்யு வருத்தப்படுகிறார்.  

இந்த நோய் குழந்தைக்கு  கர்பப்பையில் ஆறு வார சிசுவாக இருக்கும் போதே ஏற்படும் எனவும், இந்நோயத்தொற்றுள்ள குழந்தைகளுக்கு "வெர்பெற்றெ" எனும் நரம்பு எண்ணிக்கை 7 க்கு பதிலாக 10 இருக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 

அந்த சிறுவனின் ஏழ்மை நிலை காரணமாக, பெய்ஜிங்கை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தபின், சாயாங் மருத்துவமனை சிகிச்சையளித்து வருகிறது.

9ஆமை போன்று தோற்றமளிக்கும் சிறுவன்

2011 ஆம் ஆண்டு டைடியர் மொண்டால்வோ எனும் ஐந்து வயது சிறுவன், இங்கலாந்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில்  தனது பின்புறம் இருக்கும் ஆமை போன்ற அமைப்பினை நீக்குவதற்காக அனுமதிக்கப்பட்டான். அவனது உடல் அமைப்பை கண்ட அவர்கள், இது மாதிரியான உடல் மாறுபாட்டை நாங்கள் எங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்றனர்.
அதிர்ஷ்டவசமாக, சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, தம்மைப்போலவே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் சிறுவன் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளான்.

8மீனின் செதில்களை போன்ற தோற்றமுடைய சிறுவன்

2013 ஆம் ஆண்டு பேன் ஜியன்ஹங் எனும் எட்டு வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் அரிய நோயான " இக்தயோசிஸ் " பாதிக்கப்பட்டுள்ளான் என்பதை ஊடகங்கள் வெளியிட்டன.இந்த நோயால் பாதிக்கபட்டோருக்கு வேர்வை உடலை விட்டு வெளியேறாமல் இருக்கும். இதனால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, மீன்களின் செதிளைப்போன்ற தோற்றம் உருவாகும்.

7பாதி தலையுடன் பிறந்த குழந்தை

ஜாக்சன் புவெல் எனும் ஆண் குழந்தை பாதி தலையுடனும், பாதி மூளையுடன் பிறந்த செய்தி உலகின் மூலை முடுக்கெங்கும் பரவியது. இந்த குழந்தை பிறந்தால் பேசவும் செய்யாது நடக்கவும் செய்யாது ஆகவே கருக்கலைப்பு செய்துவிடுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்திய போதிலும் பெற்றோர்கள் இந்த குழந்தையை கருக்கலைப்பு செய்யவில்லை.  
மருத்துவர்கள் கூறியதற்கு நேர்மாறாக இந்த குழந்தை பேசவும் நடக்கவும் செய்கிறது. மனிதத்துக்கு மீறிய ஒரு சக்தி உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.

6முகம் முழுவதும் முடி  

ஜூன் 2011 ஆம் ஆண்டு எட்டு வயது நிரம்பிய ஏன்குய் எனும் சிறுவன் முகம் முழுவதும் உள்ள பிறவி அடையாளத்தை நீக்க மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான். அவரது பெற்றோகள் தனது மகனின் எதிர்காலம் இதனால் இருட்டகிவிடக்கூடாது என எண்ணியே இந்த சிகிச்சையை செய்துள்ளனர்.

5கடல்கன்னி தோற்றமுடைய பேன் குழந்தை

சிலோ பெபின் எனும் குழந்தை "சைறேநோமேலியா" எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கால்கள் இரண்டும் ஒட்டிப்பிறந்தது.இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகள் சில காலம் மட்டுமே உயிர் வாழும். ஆனால், சிலோ பெபின் பத்து வயது வரை வாழ்ந்து மரணித்தது.

4வளர்ந்துகொண்டே செல்லும் கால்பகுதி

ஜியோ மெங் எனும் சிறுவன் வித்யாசமான "கன்ஜெனிடல் நியூரோபைப்ரோமடோசிஸ்" நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவனின் கால்பகுதி வளர்ந்துகொண்டே செல்கிறது. ஏழ்மை நிலை காரணமாக ஷாங்காய் மருத்துவமனை இலவச சிகிச்சை அளித்து உதவி செய்துவருகிறது.

3உலகத்திலேயே அதிக எடை கொண்ட குழந்தை

4 வயது மட்டுமே நிரம்பிய இந்த குழந்தை சரியான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில்லாத காரணத்தினால் நாளுக்கு நாள் உடல் எடை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது இந்த குழந்தையின் எடை 60 கிலோ ஆகும். இப்போதே நடக்க மற்றும் விளையாட முடியாத இந்த குழந்தை எப்படி எதிர்காலம் இருக்கும் என எண்ணி லு ஹவோ வின் பெற்றோர்கள் வருந்துகின்றனர்.

2பட்டாம்பூச்சி சிறுவன்

இந்த படத்தில் உள்ள சிறுவனின் பெயர் ஜோனதன் பிட்டர் , இவன் ருசெல் , கெனடாவில் வாழ்ந்து வருகிறான் . இந்த "எபிதேர்மிஎஸ் புல்லோஸ்" என்கிற அரிய நோயினால் பாதிக்கப்படுள்ளதால் , அவனது தோல் தானாக உரிந்து கீழே விழும்.இதனால் அவனுக்கு உடல் முழுவதும் கட்டு போடுவது அவசியம். ஆனால், கட்டுப்போடும் போதும் , பிரிக்கும் போதும் தாங்க முடியாத வழியில் வாடுவதாக அவனது பெற்றோர்கள் வருந்துகின்றனர்.

1மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை

 ஜூன் 2015 ஆம் ஆண்டு டெஷ்ஹா எவன்ஸ் எனும் குழந்தை மூக்கே இல்லாமல் பிறந்தது.இதற்கு காரணம் " கன்ஜெனிடல் அர்ஹானியா" எனும் நோய்தொற்றே ஆகும். மூக்கு போன்ற அமைப்பை செயற்கையாக உருவாக்க ,இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.   இதற்கு மேல் எல்லாம் ஆண்டவன் கைல தான் இருக்கு!

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.