இந்தியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்கள் ,2015
ஃபோர்ப்ஸ் பத்திரிகை,வருடாந்திர சொத்து மதிப்பீட்டின் அடிப்படையில் 2015 ஆண்டிற்கான இந்தியாவின் முதல் பத்து செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
10குமார் பிர்லா ($7.8 பில்லியன்)
குமார் மங்கலம் பிர்லா, ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர்.இந்த நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வணிக குழு ஆகும்.அவர் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் பிர்லா இன்ஸ்டிடியூட் வேந்தராக இருக்கிறார்.அவர் அவரது குழந்தைப் பருவத்தை கொல்கத்தா மற்றும் மும்பையில் கழித்தார்.அவர் பீ.காம் பட்ட படிப்பினை யுனிவெர்சிட்டி ஆப் பாம்பேயிலும் மற்றும் எம்.பெ.எ. வை லண்டன் பல்கலைகழகத்திலும் பெற்றுள்ளார்.பிறகு அவர் தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனத்தின் சேர்மன் ஆக பொறுப்பேற்றார்.அனைவருக்கும் பல சந்தேகங்கள் எழுந்தன ,இவர் நெசவு மற்றும் ஆடைத்தொழிற்சாலை, சிமெண்ட், அலுமினியம், உரங்கள் போன்ற தொழிற்சாலைகளை எடுத்து நடத்த தகுதி உள்ளவற என்று.இப்படி இருக்க,அவர் தனது தொழிலின் மீது மட்டுமே கவனம் செலுத்தி தொலைத் தொடர்பு, மென்பொருள் மற்றும் பிபிஓ உட்பட எல்லா துறைகளிலும் சாதிக்க தொடங்கினார்.இவர் 1995யில் பொறுப்பேற்றபோது ,கம்பனியின் ஆண்டு வருமானம் இரண்டு பில்லியன் ஆக இருந்தது.இவர் பதவியேற்றபின் ,வருமானம் படிப் படியாக உயர்ந்து 40 பில்லியன் டாலராக உயர்ந்தது.அதுமட்டுமல்லாது ,தற்போது நாற்பது நாடுகளுக்கு அவரது நிறுவனம் விரிவடைந்துள்ளது.60 சதவீத வருமானம் வெளில் நாடுகளில் இருந்து மட்டுமே வருகிறது மற்றும் இந்த நிறுவனத்தில் 1,30000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
9சைரஸ் எஸ் பூனவல்லா (7.9 பில்லியன்)
பூனவல்லா சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சேர்மன் ஆவார்.இந்த நிறுவனம் இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.மார்ச் 2015 வெளியான பத்திரிகையில் ,இவர் இந்திய பணக்காரர்கள் வரிசையில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார் மற்றும் அவரது ஆண்டு வருமானம் 7.9 பில்லினாக இருந்தது.அதுமட்டுமல்லாமல் உலக பணக்காரர்கள் வரிசையில் 208 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூனவல்லா தனது பள்ளி படிப்பினை பிஷப் ஸ்கூல் ,பூநேவிலும் பட்ட படிப்பினை பிர்ஹா பல்கலைகழகத்திலும் பயின்றார். இவர் மருத்துவ துறையில் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி இந்திய அரசாங்கம் பத்ம ஸ்ரீ விருதினை கொடுத்துள்ளது.
8லட்சுமி மிட்டல் ($ 11.2 பில்லியன் )
இவர் 15 ஜூன் 1950 யில் பிறந்தார்.நமக்கு முன்பே தெரிந்தற்போல் ,இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றே கூறலாம்.ஏனென்றால் ,இவர் உலகின் தலைசிறந்த ஸ்டீல் நிறுவனமான ஆர்சிலெர்மிட்டல்க்கு தலைவராக உள்ளார்.
2007 ஆம் ஆண்டில் , இவர் ஐரோப்பாவின் பணக்காரர் வரிசையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.இவர் பிரிட்டனின் எட்டாவது வளமான மனிதர்களில் ஒருவராகவும் ,உலக பணக்காரர்கள் வரிசையில் ஆறாவது இடத்தையும் 2011 ஆம் ஆண்டு பெற்றார்.அனால் 2015 ஆம் ஆண்டில் 83 ஆவது இடத்திற்கு பின் நோக்கி தள்ளப்பட்டார்.
இவரது மகளின் திருமணம் ,உலகின் இரண்டாவது பிரம்மாண்டமான திருமணத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மிட்டல் 2008 ல் இருந்து கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக, மேலும் (முன்னர் ஐரோப்பிய விண்வெளி மற்றும் ஆகாய பாதுகாப்பு நிறுவனத்தின் (EADS ஐ) என அழைக்கப்படும்) ஏர்பஸ் குழு இயக்குனர்கள் குழு உறுப்பினராகவும் உள்ளார்.2006 ஆம் ஆண்டில் சண்டே டைம்ஸ் பைனான்சியல் டைம்ஸ் "ஆண்டின் நபர்" என்று அழைத்தது.
7கோத்ரேஜ் குடும்பம் (11.4 பில்லியன்)
நாம் அனைவரும் அறிந்தபடி ,கோத்ரேஜ் பேமிலி ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், தொழிற் பொறியியல், உபகரணங்கள், தளபாடங்கள், பாதுகாப்பு மற்றும் விவசாய பொருட்கள் ஆகிய அனைத்திலும் சாதனை புரிந்த நிறுவனம் ஆகும்.
ஆதி கோத்ரெஜ் ,நாதிர் கோத்ரேஜ், மற்றும் உறவினர், ஜம்ஷ்ய்த் கோத்ரேஜ் ஆகியோர் தலைமையில் இந்த நிறுவனம் துவங்க பட்டது.இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2004 இன் கணக்கெடுப்பின் படி 11.4 பில்லியன் ஆகும்.இந்த நிறுவனத்தை துவங்குவதற்கு தூண்டு கோலாக அமைந்தது 1987 இல் ஒரு நாளிதழில் பம்பாயில் திருட்டு அதிகம் ஆகிவிட்டது என்ற செய்தியை படித்த பின்பு தான் அர்டஷிர் கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் பிரோஜ்ஷா கோத்ரேஜ் இணைந்து கோத்ரேஜ் பூட்டினை உற்பத்தி செய்து பாம்பே முழுவதும் விற்க தொடங்கினர்.தற்போது, அவர்களுக்கு 3500 ஏக்கர் பரபளவிலான நிலம் மும்பையில் உள்ளது.அதன் 2011 இன் நிலவரப்படி மதிப்பு 12 பில்லியன் ஆகும்.
ஜூலை 2014 யில் நடந்த ஒரு ஏலத்தில் 324 கோடி மதிப்புள்ள ஒரு மாளிகை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6ஷிவ் நாடார் (14.7 பில்லியன்)
ஷிவ் நாடார் (1945 ஜூலை 14 இல் பிறந்தவர்) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் கொடை வள்ளல் ஆவார். அவர் ஹெச்.சி.எல் மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளை நிறுவனர் ஆவார். 2015 வரை, அவரது தனிப்பட்ட செல்வம் $ 13.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1970 ஆண்டின் மத்தியில் எச்.சி.எல் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினர் .அதன் தொடர்ச்சியாக 1990 இல் ஹார்ட் வேர் கம்பெனியையும் நிறுவினர்.அவரது தொழில்நுட்ப சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மா பூசன் விருதை கொடுத்து பெருமைப்படுத்தியது.
ஷிவ் நாடார் பிரபலமான தமிழ் நாவலாசிரியர் ரமணிச்சந்திரனின் சகோதரர் ஆவார். நாடார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூலைபொழி எனும் கிராமத்தில் 1945 ஆம் ஆண்டில் பிறந்தார் .அவரது பெற்றோர் சிவசுப்ரமணிய நாடார் மற்றும் வமசுன்டரி தேவி ஆவார். நாடார் அம்மா, வமசுன்டரி பிரபல பத்திரிகையான தினத்தந்தியின் நிறுவனர் எஸ்.பீ ஆதித்தனார் ஆவார். நாடார் தனது பள்ளி படிப்பினை கும்பகோணத்தில் உள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.இவர் மின்சார மற்றும் மின்னணு பொறியியலை கோயம்பத்தூரில் உள்ள பீ.எஸ்.ஜி கல்லூரியில் பயின்றார் .பிறகு பூனேவில் உள்ள ஒரு தனியார் துறையான வால்சாந்து கோபர் நிறுவனத்தில் வேலை செய்தார்.சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணி மைக்ரோகாம்ப் நிறுவனத்தை 1976 இல் அவரது நண்பர்களான அஜய் சௌத்ரி (முன்னாள் தலைவர், ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ்), அர்ஜுன் மல்ஹோத்ரா (தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர், ஹெட்ஸ்டார்ங்), சுபாஷ் அரோரா, யோகேஷ் வைத்யா, எஸ் ராமன், மஹேந்திர பிரதாப் ஆயக்யோருடன் இணைந்து 1,87000 ரூபாய் முதலீட்டில் துவங்கினர்,அந்நிறுவனம் டெலிடிஜிட்டல் கேள்குலேடர்களை உற்பத்தி செய்தது பிறகு எச்.சி.எல் நிறுவனமாக உருவெடுத்தது.இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கபூரிலும் தனது ஹார்ட்வேர் பொருட்களை ஏற்றுமதி செய்து முதலாண்டிலேயே 1 கோடிக்கு மேலான லாபத்தை ஈட்டினார்.
5பல்லோஞ்சி மிஸ்ட்ரி (14.7 பில்லியன்)
பல்லோஞ்சி ஷபூர்ஜி மிஸ்ட்ரி 1929 இல் பிறந்தவர் ஆவர்.இவர் மிகபெரிய கட்டுமான தொழில் அதிபர் .இவரது சொத்து மதிப்பு நவம்பர் 2015 இன் நிலவரப்படி 16.3 பில்லியன் ஆகும்.இவர் இந்தியாவின் பெரிய நிறுவனமா டாட்டா குழுமத்தின் 18.4 சதவீத பங்கினை கொண்ட மிக முக்கியமான பங்குதாரர் .அதுமட்டுமல்லாமல் ஃபோர்ப்ஸ் டெக்க்ஷ்டைல்ஸ் மற்றும் யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் ஆவார்.இவை அனைத்திற்கும் அடிகோலாய் அமைந்தது இவரது தந்தை 1930 களில் டாட்டா சண் நிறுவனத்தில் பங்குகள் வாங்கியதே ஆகும்.
4ஹிந்துஜா குரூப் (14.8 பில்லியன்)
ஹிந்துஜா நிறுவனம் 1914 ல் பரமானந்த் தீப்சாந்து ஹிந்துஜாவால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் மும்பையில் தொடர்ந்த இந்த நிறுவனம் பிறகு சர்வதேச அளவிலான நிறுவனத்தை ஈரான் நாட்டில் உருவாக்கியது.1979 வரை ஈரானில் தலைமை இடமாக கொண்டது அனால் இஸ்லாமிய புரட்சியின் விளைவாக தலைமையிடம் லண்டனுக்கு மாற்றப்பட்டது.அணைத்து ஹிந்துஜா சகோதர்களும் சைவ விரும்பிகள் மற்றும் புகை,குடிபழக்கம் இல்லாதவர்கள்.அதுமட்டுமல்லாமல் அனைவரும் ஒரே விதமான கருப்பு ஆடைகள் மற்றும் வட்ட வடிவிலான கன்னடிகலையே அணித்து வருகின்றனர்.
அதன் தலைவர் சிறீசந்த்கிரி தலைமையின் கீழ் இயங்கும் இந்துஜா குழுமம் தற்போது உலகின் பெரிய பன்முகத் குழுக்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த மிகப்பெரிய நிறுவனத்தில் சுமார் 70,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு ,பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தனர் .அப்போது அவர்களது சொத்து மதிப்பு 20 பில்லியன் ஆகா இருந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஏசியன் அவார்ட்ஸ் ஹிந்துஜா சகோதரர்களுக்கு "Business Leader of the Year award" வழங்கி பெருமைப்படுத்தியது.
3அசிம் பிரேம்ஜி (17.5 பில்லியன்)
அஸிம் ஹஷிம் பிரேம்ஜி (ஜூலை 24, 1945 அன்று பிறந்தார்) விப்ரோ லிமிடெட் இன் நிறுவனர் ஆவார்.இவர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஒரு ஜாம்பவான் என்றே கூறலாம்.2010 ஆம் ஆண்டு எசியவீக் வெளியிட்ட 20 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரேம்ஜி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 2004 மற்றும் 2011 ஆண்டுகளில் TIME MAGAZINE வெளியிட்ட " 100 MOST INFLUENTIAL PEOPLE" பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார்.73% சதவீத விப்ரோ பங்கினை இவரே வைத்துள்ளார்.
25 சதவீத வருமானத்தினை சமூக சேவை செய்யும் நிறுவனங்களிடம் கொடுத்து உதவி வருகிறார் மேலும் வரவிருக்கும் வருடங்களில் 50% உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
1945 இல், முகம்மது ஹசிம் பிரேம்ஜி அமல்நேர் , மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் காய்கறி பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு சிறிய தொழிற்சாலையாக இருந்தது.பிறகு "சூரியகாந்தி வனஸ்பதி " என்ற பெயரில் சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் சலவை சோப் 787 ஆகியவற்றை உற்பத்தி செய்தது.1966 இல், அவரது தந்தை இறந்த செய்தி அறிந்து 'அசிம் பிரேம்ஜி' ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த அவர் விப்ரோ கம்பனியை நிர்வாகிக்க இந்திய திரும்பினார்.இவர் மேலாண்மையில் இநருந்த விப்ரோ நிறுவனம் சமையல் எண்ணெய் மற்றும் சோப்பு அல்லாது இன மூலப்பொருள் சார்ந்த சோப்பு, முடி பராமரிப்பு சோப்புகள், குழந்தை சோப்பு, லைட்டிங் பொருட்கள், மற்றும் ஹைட்ராலிக் உருளைகள் என விரிவுபடுத்தினர்.
1980 களில் தொழில்நுட்ப துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் செண்டிநெல் கார்பரேசன் உடன் இனைந்து "MINICOMPUTER" உற்பத்தி செய்தார்.
தற்போது IT துறையில் "WIPRO" தனக்கென ஒரு மிகசிறந்த இடத்தை பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.
2திலிப் ஷங்க்ஹ்வி (18 பில்லியன்)
திலிப் 1 அக்டோபர் 1955 அன்று குஜராத்தில் அம்ரேலி என்ற சிறிய நகரில் பிறந்தார். சங்வி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் தனது தந்தையின் மொத்த மருந்துகள் வணிக அலுவலகத்திற்கு வந்து அவ்வப்போது உதவி செய்து கொண்டிருந்தார்.மற்றவர்கள் உற்பத்தி செய்யும் மருந்தினை விற்பனை செய்வதற்கு பதிலாக நாமே ஏன் உற்பத்தி செய்யக்கூடாது என்று சிந்தித்தார்.
1982 இல் திலிப் சங்வி ,வேப்பி என்ற இடத்தில ரூ .10,000 மட்டுமே முதலீடாக கொண்டு "சன் பார்மசூட்டிக்கல்ஸ்" என்ற மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கினார் .1983 இல் சங்வி ஐந்து உளவியல் சம்மந்தமான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து பெரும் வெற்றி பெற்றார். அதன் விளைவாக சன் பார்மாகியுடிகல்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய "DRUG MAKER" மற்றும் மிகவும் மதிப்புமிக்க மருந்து நிறுவனமாக பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது .
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அவரது நிகர சொத்து மதிப்பு $ 17.2 பில்லியன் ஆகும் .மிகப்பெரிய அமெரிக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தையே தனக்கு சொந்தமாகிகொள்ளும் அளவிற்கு உய்ந்தார்.ஆசியாவிலேயே அதிக செல்வம் உடைய பத்து பேர் கொண்ட பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது .
19 பிப்ரவரி 2015 அன்று , இந்திய மிகப் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானியையே பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
1முக்கேஷ் அம்பானி (18.9 பில்லியன்)
முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவிலேயே இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான "ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்" இன் தலைவர் சேர்மன் ஆவார். இந்த நிறுவனம் ஒரு பார்ச்சூன் குளோபல் 500 நிறுவனத்தில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 20.8 பில்லியன் ஆகும்.இவர் 2010 ஆம் ஆண்டு ,"ஹர்ட்வர்ட் பிசினஸ் ரெவ்யு" வெளியிட்டுள்ள தலைசிறந்த "CEO" பட்டியலில் ஐந்தாம் இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பெற்ற விருதுகள்:
Ernst & Young Entrepreneur of the Year,Global Vision Award at The Awards Dinner,Business Leader of the Year,Businessman of the Year,School of Engineering and Applied Science Dean's Medal,Global Leadership Award,Honorary Doctorate (Doctor of Science)