2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஜொலிக்காததற்கான முக்கிய காரணங்கள்
தற்போது
நடந்து முடிந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா
வெறும் இரண்டு பதக்கங்களை மட்டுமே
வென்று 67 வது இடத்தை பிடித்தது.
குறைந்த மக்கள் தொகை மற்றும்
பொருளாதார வளரச்சி குன்றிய ஜமைக்கா
11 பதக்கங்களுடன் 16 இடத்தை பிடித்துள்ளது.அதிக
மக்கள்தொகை கொண்ட இந்தியா ஒலிம்பிக்கில்
பிரகாசிக்காதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
10ஜி.டி.பி (நாட்டின் பொருளாதாரம்)
இந்தியா
- அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடு
ஆனால் நிலப்பரப்பில் 7 வது இடம். இதனால்
மக்கள் நெருக்கடி சீனாவை காட்டிலும் இந்தியாவில்
அதிகம், அதோடு சீனாவின் பொருளாதார
வளர்ச்சி இந்தியாவை விட அதிகம். அதனால்
சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள்
பெருமளவு பணத்தை விளையாட்டுகளில் செலவிடமுடிகிறது,
அதோடு பதக்கங்களையும் குவிக்க முடிகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு
புரிந்துவிடும்.
9நாம் எந்த விளையாட்டில் சிறந்து விளங்குகிறோமோ அதில் கவனத்தை செலுத்தவில்லை
1928 களில்
இருந்து 1980 வரை நடைபெற்ற அனைத்து
ஹாக்கி ஒலிம்பிக்
போட்டிகளிலும் இந்தியா 11 பதக்கங்கள் வென்றுள்ளது. ஆனால், 1980 ற்கு பிறகு
ஹாக்கி போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை
மற்றும் எந்த தங்கங்களையும் பெறவில்லை.
ஏனென்றால்,
நாம் எந்த விளையாட்டில் சிறந்து
விளங்குகிறோமோ அதில் கவனத்தை செலுத்தவில்லை.
8கிரிக்கெட் தவிர வேற எந்த விளையாட்டிற்கும் ஆதரவாளர்கள்( ஸ்பான்சர்ஸ்) இல்லை
நீங்கள்
தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருந்தால்
காட்டாயம் "குற்றாலீஸ்வரன்" எனும் 13 வது நீச்சல்
போட்டியில் பல சாதனைகள்புtரிந்த வீரன்
என்று தெரிந்திருக்கும். இவர் தற்போது என்ன
செய்கின்றார் என்று தெரியுமா உங்களுக்கு? நீச்சல்
துறையை விடுத்து, எம்.பி.எ
படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இதற்கு காரணம், பல்வேறு நீச்சல்
போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டிற்கு செல்ல அவர் தந்தையிடம்
பணம் இல்லை. கிரிக்கெட் போட்டிகளில்
பல கோடிகளை வாரி
இறைக்கும் ஸ்பான்சர்கள், இவருக்கு ஒரு ருபாய்
கொடுத்துக்கூட உதவவில்லை.
வேறு எந்த நாட்டிலாவது இவர்
பிறந்திருந்தால் மைக்கேல் பெல்ப்ஸை விட
அதிக மெடல்களை நீச்சல் போட்டியில்
குவித்திருப்பார்.
பதக்கங்களை
வென்ற பிறகு பி.வி.சிந்து மற்றும் இதர
வீரர்களுக்கு கொடுத்த பரிசுத்தொகையை பயிற்சியின்
போதே கொடுத்திருந்தால் இன்னும் பல பதக்கங்கள்
கிடைக்க வாய்ப்பிருந்துருக்கும்.
7ஒலிம்பிக்கில் பெண்களின் பங்கேற்பு குறைவு
சராசரியாக
அதிக பதக்கங்களை வென்ற அமெரிக்கா
மற்றும் பிரிட்டன் நாடுகளில் 60% சதவீதம் பெண்கள் மற்றும்
40% சதவீதம் ஆண்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர்.
அதனால் வெற்றி சதவிகிதம் அதிகம்.
ஆனால் நமது நாட்டில் 40 சதவீதம்
பெண்களும் 60% ஆண்களும் பங்கேற்றுள்ளனர்.இந்தியா
அதிக பதக்கங்கள் வெல்லாததற்கு இதுவும் ஒரு காரணம்.
6உடல்நலம் மற்றும் போஷாக்கு இன்மை
இந்தியாவில்
5 வயதிற்குள்ளாக உள்ள குழந்தைகளில் 20% ஊட்டச்சத்து
குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 43% குழந்தைகள் மிக குறைத்த எடைகொண்டுள்ளனர்.
இதற்கு மிக முக்கிய காரணம்
அனைத்து உணவுப்பொருள்களிலும் கலப்படம். குழந்தைகள் பருகும் பாலில் 20% மட்டுமே
பசும் பால் , 80% சோயா பாலே கலக்கப்படுகிறது.
சித்திரம் இல்லாமல் ஓவியம் வரைய
இயலாது. ஆனால், அமெரிக்கா அதிக
சத்துள்ள உணவுகளை தனது விளையாட்டு
வீரர்களுக்கு வழங்கி அதற்கு பலனாக
பதக்கத்தையும் குவித்து வருகிறது.
5போதுமான அரசாங்க உதவி விளையாட்டு வீரர்களுக்கு இல்லை
நெடுந்தூர
ஒட்டப்பந்தயமான மாரத்தான் போட்டிகளில் ஒவ்வொரு 2.5 கிலோமீட்டர் இடைவெளியிலும் தண்ணீர் மற்றும் பிஸ்கட்டுகள்
வழங்குவார்கள். ஆனால், இந்தியா மாரத்தான்
வீராங்கனையான ஜெயிஸா ஒலிம்பிக் போட்டியில்
ஓடும் போது, தண்ணீர் குடுக்க
கூட ஆள் இல்லை. ஆள்
இருக்கவேண்டிய இடத்தில் வெறும் இந்தியா
என்றெழுதிய பலகை மட்டுமே இருந்தது.
இதனால் மயங்கி விழுந்த ஜெனிஷாவிற்கு
சிகிச்சை அளிக்க கூட இந்தியாவை
சேர்ந்த மருத்துவர்கள் அங்கு வரவில்லை. அவர்
தனது பேட்டியில் "நான் இறந்தே போயிருப்பேன்"
என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தண்ணீர்
கொடுக்கவே ஆள் இல்லை , தங்கம்
எப்படி கிடைக்கும்?
4பெற்றோர்கள்- விளையாட்டே வேண்டாம்
விளையாட்டு
துறைகளில் வெகு சிலரே சாதிக்கின்றனர்
அதோடு வாய்ப்புகளும் குறைவு என்று
என்னும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
முழுநேரமும் விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிப்பதில்லை.
ஆனால் சீனா போன்ற நாடுகளில்
சிறு வயதிலேயே தங்கள் குழந்தைகளின்
திறனுக்கேற்ற விளையாட்டுகளில் சேர்த்து மிகவும் கடினமான
பயிற்சிகளை அளிக்கின்றனர்.
டோனியை பாராட்டும் பல பெற்றோர்கள், தனது
மகன் தோனியாவதை விரும்புவதில்லை .
3சம்பள உத்தரவாதம் மற்றும் பென்ஷன்
மற்ற துறைகளை போல் விளையாட்டு
துறைக்கும் வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கான
உத்தரவாதம் மற்றும் ஓய்வூதியம் வழங்க
வேண்டும். இந்தியாவின் சார்பாக பங்கேற்ற 50% விளையாட்டு
வீரர்கள் தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு
வேலையும் விளையாட்டினை பகுதிநேர வேலை செய்பவர்கள்
தான். முழுநேரமாக விளையாட்டில் கவனம் செலுத்தினாலே பதக்கம்
வெல்வது கடினம்.
2அதிநவீன வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லை
பள்ளிகளிலும்
, கல்லூரிகளிலும் பி.டீ பீரியடை
கடன் வாங்கி கணக்கு பாடங்களை
நடத்தும் வாத்தியார்கள் இருக்கும் வரை ஒரு தகரம்
கூட பெற இயலாது. அப்படியே
திறமை மிகுந்த விளையாட்டு வீரர்
இருந்தாலும், அவர்களை தனிக்கவனம் கொண்டு
வழிநடத்த ஆட்கள் இல்லை. அப்படியே
வழிநடத்த ஆள் இருந்தாலும், அதி
நவீன வசய்திகள் மற்றும் கருவிகள் இல்லை.
1நாம் சிறந்து விளங்கும் விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இல்லை
கபடி: இதுவரை நடைபெற்ற அனைத்து
கபடி உலக கோப்பைகளிலும் , ஆண்
மற்றும் பெண் இரண்டு பிரிவுகளிலும்
இந்தியா மட்டுமே வென்று சாதனை
படைத்துள்ளது.கபடி ஒலிம்பிக்கில் இருந்திருந்தால்
கண்டிப்பாக தங்கம் நமக்குத்தான்.
ஸ்னூக்கர்:இந்தியாவின் பிரின்ஸ் என அழைக்கப்படும்
உலகின் நம்பர் ஒன் ஸ்னூக்கர்
வீரர் பங்கஜ் அர்ஜன் பங்கேற்றால்
தங்கம் நமக்குத்தான்.
செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் - ஏதாவது ஒரு
பதக்கம் நிச்சயம்.
கிரிக்கெட்:
தோனியின் தலைமை மற்றும் விராட்
கோலியின் அஃகிரேசிவான ஆட்டம் தங்கத்தை இந்தியாவிற்கு
கொண்டு வரும்.